ஜாதகம் பொருத்தம் பார்க்க | Jathagam Porutham Online Tamil
திருமணப் பொருத்தம் பார்க்கும்பொழுது கவனிக்கப்பட வேண்டியவைகள்:
திருமண பொருத்தத்தில் ராசி மற்றும் நட்சத்திர பொருத்தம் மட்டும் இல்லாமல் ஜாதக பொருத்தமும் பார்க்க வேண்டும். அதாவது ஜாதக பொருத்தம் என்பது இருவரின் ஜாதகத்திலும் கிரக நிலைகளை ஆய்வு செய்து பொருத்தம் பார்ப்பது. இதை கிரகப் பொருத்தம் என்கிறோம்.
✍︎ ஆண் பெண் இருவரின் நடப்பு தசாவையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அது ஆறாவது, எட்டாவது, பன்னிரண்டாவது தசையாக வருகிறதா என்பதை பார்க்க வேண்டும்.
✍︎ ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றோருக்கு இல்லையெனில் நடப்பு தசா மற்றும் அடுத்த தசாக்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதேபோல்தான் ராகு கேது தோஷத்திற்கும்.
✍︎ பெண்ணின் ராசியிலிருந்து 6,8,12 இடங்களில் ஆணின் ராசி வரக்கூடாது. அதேபோல் ஆணின் ஜாதகத்திலும் தவிர்ப்பது நல்லது.
✍︎ இரண்டு ஜாதகத்திலும் ராகு கேது தோஷம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
✍︎ இரண்டு ஜாதகத்திலும் செவ்வாய் தோஷம் இருக்கிறதா அல்லது நிவர்த்தி அடைந்து உள்ளதா என்பதையும் செவ்வாயின் நிலையையும் ஆய்வு செய்ய வேண்டும்.
✍︎ ஒருவரின் ஜாதகத்தில் குரு வக்ர நிலையிலிருந்து மற்றொருவர் ஜாதகத்தில் குரு வக்ர நிலையில் இல்லை என்றால் குடும்பத்தில் சந்தேகம் மற்றும் குழப்பம் ஏற்படும். காரணம் குரு வக்கிர நிலையில் இருப்பவர்களுக்கு கெட்டவர்கள் நல்லவர்களாக தெரிவார்கள். நல்லவர்கள் கெட்டவர்களாக தெரிவார்கள். அதுவே குரு வக்ர நிலையில் இல்லாதவர்கள் சரியாக மதிப்பீடு செய்வார்கள். பெண்ணிற்கு குரு வக்ர நிலையில் இருந்தால் தப்பானவர்களை நல்லவர்கள் என நினைத்து பழகுவார்கள் அது குடும்பத்தில் பாதிப்பு ஏற்படுத்தும். அதேபோல்தான் ஆணிற்கும் இது பொருந்தும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் குடும்பம் சிதைவடையும்.
✍︎ ஆண் பெண் இருவரின் ஜாதகத்திலும் சனியின் வக்கிரநிலையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சனி இரண்டாம் இடம் மற்றும் ஏழாம் இடம் தொடர்பு கொள்ளும் பொழுது கண்டிப்பாக பார்க்க வேண்டும். பதினோராம் அதிபதியுடன் சம்பந்தப்படும் பொழுது கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டும்.
✍︎ இருவரின் ஜாதகத்திலும் இரண்டாம் அதிபதி மற்றும் ஏழாம் அதிபதி மற்றும் பதினோராம் அதிபதி ஆகியோரின் நிலையை ஆய்வு செய்ய வேண்டும்.
➨ இரண்டாம் இடம் மற்றும் இரண்டாம் அதிபதி குடும்ப ஸ்தானத்தை குறிப்பிடுகிறது.
➨ ஏழாம் இடம் மற்றும் ஏழாம் அதிபதி முதல் திருமணத்தை குறிப்பிடுகிறது.
➨ பதினோராம் இடம் மற்றும் 11 ஆம் அதிபதி ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை குறிப்பிடுகிறது.
✍︎ இருவரின் ஜாதகத்திலும் ஐந்தாம் அதிபதியை ஆய்வு செய்ய வேண்டும். ஐந்தாம் இடம் மற்றும் ஐந்தாம் அதிபதி குழந்தை பாக்கியத்தை பற்றி குறிப்பிடுகிறது.
திருமணப் பொருத்தம் | Marriage Porutham Online Tamil

✍︎ பெண்ணாக இருந்தால் செவ்வாயின் நிலையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால் ஆணின் ஜாதகத்தில் ஆயுள் தீர்க்கமாக இருக்கும். பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் கடினமாக பாதிக்கப்பட்டிருந்தால் ஆணின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமையாக இருக்க வேண்டும்.
➨ ஆணாக இருந்தால் சுக்கிரனின் நிலையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் பாதிக்கப்பட்டிருக்கக் கூடாது. சுக்கிரன் வலிமையாக இருந்தால் திருமண பந்தம் நன்றாக இருக்கும். சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தால் பெண்ணின் ஜாதகத்தில் பெண்ணின் லக்னாதிபதி மற்றும் சுக்கிரன் பலமாக இருக்க வேண்டும்.
➨ இரண்டு ராசியும் பொருந்துகிறதா அதாவது ரஜ்ஜு பொருத்தம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
➨ அடுத்ததாக யோனி பொருத்தம் மற்றும் வேதை பொருத்தம் இருக்கிறதா என பார்க்க வேண்டும்.
➨ இரண்டு ராசியும் நட்பு ராசியா அல்லது பகை ராசியா என பார்க்க வேண்டும். அந்த ராசியின் நாதன் ஜாதகத்தில் எந்த இடத்தில் அமர்ந்துள்ளார் என்பதையும் பார்க்க வேண்டும்.
➨ இரண்டு லக்னமும் நட்பு லக்னமா அல்லது பகை லக்னமா என்பதை பார்க்க வேண்டும்.
➨ ராசி பொருத்தம் மற்றும் ராசி அதிபதி பொருத்தம் இதில் ஏதேனும் ஒரு பொருத்தமாவது இருக்க வேண்டும்.
➨ தினப் பொருத்தம் மற்றும் கண பொருத்தம் இதில் ஏதேனும் ஒரு பொருத்தமாவது இருக்க வேண்டும்.
➨ மகேந்திர பொருத்தம் மற்றும் நாடிப் பொருத்தம் மற்றும் விருட்ச பொருத்தம் இதில் ஏதேனும் ஒரு பொருத்தமாவது இருக்க வேண்டும்.
➨ ஜாதகத்தில் சனி, ராகு, கேது, செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்களின் நிலைகளை வைத்து அதன் சுப, பாப நிலைகளை மதிப்பட வேண்டும்.
➨ பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலைமையில் இருந்து ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் ஏதாவது ஒரு இடத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களது வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் பாதிப்பினை சந்திப்பர்.
அதேபோல் செவ்வாய் மற்றும் 2,7,11 ஆகிய இடத்தின் அதிபதிகளையும் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் காதலித்து திருமணம் செய்பவர்களும், இரு வீட்டாரின் சம்மதத்துடன் ஜாதகம் பார்த்து நடைபெறும் திருமணமும் ஏதாவது ஒரு வகையில் பிரச்சனைகள் ஏற்பட்டு தம்பதிகள் பிரிவு, மணமுறிவு, குடும்பத்தில் பிரச்சனைகள், குழப்பம் போன்ற நிகழ்வுகள் ஏற்படத்தான் செய்கிறது.
திருமணம் செய்ய நினைப்பவர்கள் திருமணப் பொருத்தம் எனப்படும் ராசி நட்சத்திர பொருத்தம் அதாவது பத்து பொருத்தம் மற்றும் ஜாதக பொருத்தம் எனப்படும் கிரக பொருத்தம் பார்ப்பது மட்டுமில்லாமல் மணமகன் மற்றும் மணமகளிடம் ஒரு சில கேள்விகளை பெற்றோர்களும் கேட்டு தெளிவுபடுத்திய பின்பு திருமணத்திற்கு வரன் தேடுவதை பற்றியும், திருமணத்திற்கு பொருத்தம் பார்ப்பது போன்ற வேலைகளை மேற்கொள்ளலாம்.
நான் இதுவரையில் எண்ணற்ற ஜாதகத்தை ஆய்வு செய்து திருமணத்திற்கு பொருத்தம் பார்த்து உள்ளேன். எனது அனுபவத்தை வைத்து

✍︎ திருமணத்திற்கு வரன் பார்ப்பதற்கு முன்பு ஆண் மற்றும் பெண்ணிடம் பெற்றோர்கள் கேட்க வேண்டிய கேள்வி முறைகள்:
➨ நீங்கள் யாரையாவது விரும்புகிறீர்களா ?
➨ உங்களுக்கு எப்படிப்பட்ட கணவன் அல்லது மனைவி அமைய வேண்டும் ?
➨ திருமணத்திற்குப் பின் பெண் வேலைக்கு செல்ல வேண்டும் என்று மனதில் எண்ணம் இருக்கிறதா ?
➨ பெண்ணின் மனதில் ஏதேனும் லட்சியங்கள் இருக்கிறதா ?
➨ திருமணத்திற்குப் பின் பெண் வேலைக்கு செல்ல அவரது கணவர் அனுமதிப்பாரா ?
இந்தக் கேள்வி முறைகளை இரு வீட்டினரும் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
➨ உங்களுக்கு இந்தப் பையனை பிடித்திருக்கிறதா அல்லது இல்லையா ?
➨ உங்களுக்கு இந்தப் பெண்ணை பிடித்திருக்கிறதா அல்லது இல்லையா ?
➨ பெண்ணின் விருப்பங்களையும் மற்றும் ஆணின் விருப்பங்களையும் கேட்டுக்கொண்ட பின்னரே திருமணத்திற்கான பேச்சை இரு வீட்டினரும் தொடங்க வேண்டும்.