---Advertisement---

கணப் பொருத்தம் என்றால் என்ன ? | Gana Porutham In Tamil

On: January 4, 2026 10:06 PM
Follow Us:
கணப் பொருத்தம் என்றால் என்ன Gana Porutham In Tamil
---Advertisement---

கணப் பொருத்தம் என்றால் என்ன ? | Gana Porutham In Tamil

அனைவருக்கும் வணக்கம்! நம் வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும், சில பழக்க வழக்கங்கள் இன்றும் தொடர்ந்து வருகிறது. அதில் திருமணத்திற்கு பொருத்தம் பார்ப்பதும் ஒன்று. இருப்பினும், பொருத்தங்களின் உண்மையான அர்த்தம் மற்றும் பயன்பாடு தெரியாமல் பலர் இதை வழக்கமாகப் பின்பற்றுகின்றனர். அப்படி தெரியாத பல தகவல்களை உங்களிடம் சேர்ப்பதற்கு தான் இந்த இணையத்தளம்.

முந்தைய பதிவில் தினப் பொருத்தத்தை பற்றிய முழு விவரங்களை பார்த்தோம், இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது என்னவென்றால் திருமணப் பொருத்தத்தில் இரண்டாம் பொருத்தமான கணப் பொருத்தம் பற்றிய தகவல்கள் தான். வாங்க பார்க்கலாம்.

கணப் பொருத்தம் என்றால் என்ன? | Gana Porutham In Tamil

கணப் பொருத்தம் சுருக்கமான விளக்கம்‌: பெண் குண நலன்களையும் ஆண் குண நலன்களையும் அடிப்படையாக கொண்டு அவர்களின் திருமண வாழ்க்கை மற்றும் அவர்களின் புரிதல் எப்படி இருக்கும் என்பதை அறிவதற்கு பார்ப்பது கணப் பொருத்தம்.

“இரு மனம் பொருந்த, கணம்(கணப் பொருத்தம்) பொருந்த வேண்டும்”

திருமணத்திற்கு பின் ஒருவருக்கொருவர் அனுசரித்தும் புரிதலோடும் வாழ, முக்கியமானதாக கருதப்படுவது அந்த தம்பதியினரின் தனிப்பட்ட குணங்கள் தான். அதை ஜாதக ரீதியாக கணிப்பது தான் இந்த கணப் பொருத்தம்.

கணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

கணப் பொருத்தம் என்றால் என்ன Gana Porutham In Tamil

ஆண் பெண் இருவரின் குணங்கள் (கணம்) எந்த ஒரு பகைமையான மற்றும் முரண்பாடான பண்புகளில் இல்லாமல் இருந்தால் தம்பதியினர் புரிதலோடு வாழ்வர். அப்படி பட்ட குணங்கள் பொருந்தி உள்ளதா என்று கணிப்பது தான் இந்த பொருத்தம். கணப் பொருத்தம் மொத்தம் மூன்று பிரிவுகளாக உள்ளன,

1.தேவ கணம்
2.மானுஷ்ய(மனித) கணம்
3.ராட்சச கணம்

மேல் சொல்லப்பட்ட மூன்று கணத்திற்கும் ஒரு தனித்துவமான குணம் உள்ளது, ஒவ்வொரு கணமும் 9 நட்சத்திரங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றை பற்றி விரிவாக பார்ப்போம்.

தேவ கணம்

தேவ கணம் உள்ளவர்கள் வாழ்வில் உயர்ந்த சிந்தனைகள், சிறந்த லட்சியங்கள் உள்ளவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமின்றி மற்றவர்களுடன் அன்பாகவும், நல்ல குணத்துடன் பழகக் கூடியவர்களாக இருப்பார்கள், உயர்ந்த எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

தேவகணத்தைச் சேர்ந்த 9 நட்சத்திரங்கள்: அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி.

மனித கணம்

மனித கணம் உள்ளவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றபடி வாழ்க்கையை நகர்த்தி செல்லும் குணம் உடையவர்கள். இருப்பினும் கவலையாக இருப்பார்கள் என்ன தான் நல்ல எண்ணங்கள் நிறையவே இருந்தாலும், கடுமையான எண்ணங்களும் இருக்கும். அதாவது வெளிப்படையில் நல்லவராக இருந்தாலும் சில நேரங்களில் விரோதத்தை வெளிக்காட்டும் பண்பு கொண்டவராக இருப்பார்.

மனித கணத்தைச் சேர்ந்த 9 நட்சத்திரங்கள்: பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், பூராடம், பூரட்டாதி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி.

ராட்சச கணம்

ராட்சச கணம் உள்ளவர்கள் ராட்சசன் என்று அர்த்தம் இல்லை. அவர்கள் சொந்த சிந்தனைக்கு மட்டும் தான் ஒத்துப்போகும் மனப்பான்மை உள்ளவர்கள், வேறு யாருடைய சிந்தனைக்கும் அடங்காதவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை பற்றி சிந்திக்க மாட்டார்கள், மிக அரிதாகவே நல்ல பண்புகள் வெளிப்படும்.

ராட்சச கணத்தைச் சேர்ந்த 9 நட்சத்திரங்கள்: கிருத்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்.

கணப் பொருத்தம் அட்டவணை

தேவ கணம் மனித கணம் ராட்சச கணம்
அஸ்வினி பரணி கார்த்திகை
மிருகசீரிஷம் ரோகிணி ஆயில்யம்
புனர்பூசம் திருவாதிரை மகம்
பூசம் பூரம் சித்திரை
அஸ்தம்  உத்திராடம் மூலம்
சுவாதி உத்திரம் விசாகம்
அனுஷம் பூராடம் கேட்டை
திருவோணம் பூரட்டாதி அவிட்டம்
ரேவதி உத்திரட்டாதி சதயம்

  
கணப் பொருத்தத்தின் விதிகள்

திருமண பொருத்ததில் பெண் மற்றும் ஆண்ணின் கணம் ஒரே கணமாக இருப்பது உத்தமம்.

பெண் மற்றும் ஆண்ணின் நட்சத்திரங்கள் தேவ கணத்தில் இருந்தால் கணப்பொருத்தம் மிகவும் சரியாக பொருந்தி உள்ளது மற்றும் இருவரின் நட்சத்திரங்கள் மனித கணத்தில் இருந்தாலும் கணப்பொருத்தம் உண்டு.
ஒருவேளை, ஒருவரின் நட்சத்திரம் தேவ கணமாகவும், மற்றொருவரின் நட்சத்திரம் மனித கணமாகவும் இருந்தாலும் கணப்பொருத்தம் உண்டு.

ஆண் மற்றும் பெண் இருவரின் நட்சத்திரங்கள் ராட்சச கணமாக இருந்தால் கணப்பொருத்தம் கிடையாது. அதே சமயம் ஆண் ராட்சச கணம் கொண்டவராக இருந்து, பெண் தேவ அல்லது மனித கணம் கொண்டவராக இருந்தால், கணப்பொருத்தம் மத்தியம்.

பெண் ராட்சச கணம் கொண்டவராக இருந்து, ஆண் தேவ அல்லது மனித கணம் கொண்டவராக இருந்தால் கணப்பொருத்தம் கிடையாது, இதை அதமம் என்று கூறப்படுகிறத.

கணப் பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா ?

திருமண பொருத்தத்தில் பார்க்கப்படும் முக்கியமான பொருத்தங்களில் கணப் பொருத்தமும் ஒன்று. இந்த கணப் பொருத்தம் பார்ப்பதின் மூலம் திருமணத்திற்கு பின் கணவன் மனைவி அவர்களின் வாழ்க்கை முழுவதும் மனக்கசப்பு, கருத்து வேறுபாடுகள் இல்லாமல் புரிதலோடு இருப்பார்களா என்று அறிந்து கொள்ளலாம்.

கணப் பொருத்தம் இல்லாமலும் திருமணம் செய்யலாம், ஆனால் உரிய பரிகார வழிபாடுகளை அறிந்து கொண்டு முறைப்படி செய்ய வேண்டும். கணப் பொருத்தம் இல்லை என்றாலும் தினப் பொருத்தம் இருக்க வேண்டும் என்றும் ஒரு கணக்கு உள்ளது.

தினப் பொருத்தம் என்றால் என்ன ? | Dina Porutham in Tamil

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now