அனைவருக்கும் வணக்கம்! நீங்கள் இப்போது திருமணத்திற்கு வரன் பார்த்து கொண்டிருக்கிறீர்களா? இந்த இணையத்தளத்தில் நீங்கள் தேடிக்கொண்டிருந்த திருமண பொருத்தம், மிகத் துல்லியமான விவரங்களுடன் தரப்படும். இந்த திருமணப் பொருத்தம் இணையத்தின் மூலம் உங்கள் திருமண வாழ்க்கையில் அதிர்ஷ்டம், மனநிம்மதி, மகிழ்ச்சியான சூழ்நிலை நிச்சயம் உண்டாகும்.

திருமணப் பொருத்தம் Marriage Porutham Online Tamil

நம் அனைவருக்கும் திருமணம்! என்ற வார்த்தையை கேட்டவுடன், மனதில் ஏராளமான எண்ணங்கள், ஆசைகள், கனவுகள், எதிர்பார்ப்புகள் உருவாகின்றன. சரி தானே? இவ்வாறு தோன்றுகிற ஆசைகள் நிறைவேறி மகிழ்ச்சியான நல்வாழ்வு உண்டாக என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? அதற்கான உகந்த பதில் – நமது முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட திருமண பொருத்தம், ஜாதகப் பொருத்தம் தான் இன்றும் நம் பலரால் கடைப்பிடிக்கப்பட்டு நன்மை உண்டாகி வருகிறது அல்லது ஜாதக பொருத்தத்தின் மூலம் நன்மை பெறுகிறார்கள்.

இந்த இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள சாப்ட்வேரில் நீங்கள் பொருத்தம் பார்க்கும் மணமகள் மற்றும் மணமகனின் பெயர், சரியான ராசி, நட்சத்திரத்தை கொடுங்கள்.‌ சில வினாடிகளில் அனைத்து பொருத்தங்களும் பொருந்தி உள்ளதா என்று துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கப்பட்டும்.

மணமகன்
பெயர்
இராசி
நட்சத்திரம்
மணமகள்
பெயர்
இராசி
நட்சத்திரம்

திருமண பொருத்தம் மிகவும் அவசியமானதா? எதற்காக பொருத்தம் பார்க்க வேண்டும்?

ஒரு ஆணும் பெண்ணும் மனதால் இணைந்து இல்லற வாழ்க்கையை வாழ தொடங்குவது தான் திருமணம். திருமணத்திற்கு பின் அந்த தம்பதியினர் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், நட்புணர்வோடும், நல்ல புரிதலோடும் எந்த வித மனக்கசப்பு வராமல் இருக்க கண்டிப்பாக திருமண பொருத்தம் பார்க்க வேண்டும்.

திருமண பொருத்தம்  Thirumana Porutham

இணைந்து வாழ போகும் ஆண் பெண் இருவரின் ஜாதகத்தில் உள்ள நட்சத்திர அமைப்புகளை வைத்து தான் 12 பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இந்த திருமணப் பொருத்தங்களை பார்ப்பதன் மூலம் அவர்களது குடும்ப வாழ்க்கை, புரிதல், தாம்பதிய உறவு, விட்டு கொடுக்கும் தன்மை, நம்பிக்கை, குடும்ப வளம், குடும்ப முன்னேற்றம், ஆயுட்காலம், ஒற்றுமை போன்ற பல்வேறு அம்சங்களை கணிக்கலாம்.

ஜாதகம் பொருத்தம் பார்க்க கிளிக் செய்யவும் (Jathagam Porutham)

ஜாதகம் பொருத்தம் பார்க்க  Jathagam Porutham Online Tamil

மொத்தம் 12 பொருத்தங்கள்:

  1. தினப் பொருத்தம்
  2. கணப் பொருத்தம்
  3. மகேந்திரப் பொருத்தம்
  4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
  5. யோனிப் பொருத்தம்
  6. இராசிப் பொருத்தம்
  7. இராசி அதிபதிப் பொருத்தம்
  8. வசியப் பொருத்தம்
  9. ரஜ்ஜூப் பொருத்தம்
  10. வேதைப் பொருத்தம்
  11. நாடிப் பொருத்தம்
  12. விருட்சம் பொருத்தம்

இந்த 12 பொருத்தங்களில் திருமணத்திற்கு தேவையான சில முக்கியமான பொருத்தங்கள் உள்ளது.

  1. தினப்பொருத்தம்
  2. கணப் பொருத்தம்
  3. ராசி பொருத்தம்
  4. யோனிப்பொருத்தம்
  5. ரஜ்ஜு பொருத்தம்

மேல் உள்ள இந்த ஐந்து பொருத்தம் இல்லை என்றால் திருமணப் பொருத்தம் இல்லை என்று சொல்லி அந்த திருமணம் புறக்கணிக்கப்படும்.

மேலும் இந்த முக்கியமான ஐந்து பொருத்தங்களில் கண்டிப்பாக இரண்டு பொருத்தமாவது அவசியம் இருக்க வேண்டும்.

  1. யோனி பொருத்தம்
  2. ரஜ்ஜு பொருத்தம்

இந்த இரண்டு பொருத்தங்களில் எதாவது ஒரு பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் செய்ய கூடாது. ஏனெனில் இந்த பொருத்தங்களுக்கு தனித்துவமான பண்புகள் உள்ளன. அதை பற்றிய விரிவான விவரங்களை பின் வரும் பதிவில் பார்ப்போம்.

இப்போது 12 திருமணப் பொருத்தங்களை பற்றி தெளிவாக சொல்லி அவை எதற்காக பார்க்கப்படுகிறது என்பதை இப்பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

“தெரிந்து கொள், தெளிவோடு செய், நம்பிக்கை வலிமையாக மாறும்.” இந்த வாசகத்தில் கூறப்படுவதைப் போல நீங்களும் திருமண பொருத்தம் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொண்டு பொருத்தம் பார்த்து பயன் அடையுங்கள்.

Porutham | பொருத்தம்

Jathagam Porutham Online Tamil

தினப் பொருத்தம் (Dina Porutham)

சுருக்கமான விளக்கம்‌: திருமணத்திற்கு பின் கணவன் மனைவியின் தினசரி வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கணிப்பது தான் இந்த பொருத்தம்.

தினப் பொருத்தம் என்ற பெயரிலேயே அதன் தெளிவான நோக்கம் உள்ளது. தம்பதியினருக்கு இடையில் தினம் தினம் தேவையற்ற சண்டைகள், மனக்கசப்புகள் வராமல் அன்போடு மகிழ்ச்சியாக இருப்பார்களா என்பதை எல்லாம் உறுதி செய்து கொள்ள இந்த தினப் பொருத்தம் அவசியம்.

தினப்பொருத்தம் பற்றிய அடிப்படை: மணப்பெண் பிறந்த தினத்தில் அமைந்த ஜன்ம நட்சத்திரத்தை முதலாவதாகக் கொண்டு, மணமகனின் ஜன்ம நட்சத்திரம் வரை, விரல் விட்டு எண்ண வேண்டும். அவ்வாறு எண்ணும் போது, 2,4,6,8,9,11,13,15,18,20,24,26 ஆம் நட்சத்திரங்கள் மணமகனுடையதாக அமைந்திருந்தால், அதுவே மிகவும் பொருத்தம் உடையதாகும். ஒருவேளை பெண்ணின் நட்சத்திரம் முதல் ஆணின் நட்சத்திரம் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 25 ஆவது நட்சத்திரமாக வந்தால் தினப் பொருத்தம் இல்லை.

பெண் மற்றும் ஆணின் நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டு கணிப்பதால் தினப் பொருத்தத்திற்க்கு நட்சத்திர பொருத்தம் என்ற பெயரும் உள்ளது.

சுருக்கமான விளக்கம்‌: மணப்பெண் மற்றும் மணமகனின் குண நலன்களை அடிப்படையாக கொண்டு திருமணத்திற்கு பின் ஒருவருக்கொருவர் அனுசரித்தும் புரிதலோடும் வாழ்வார்களா என்று கணிப்பது தான் இந்த பொருத்தம்.

  1. தேவ கணம்
  2. மானுஷ்ய (மனித) கணம்
  3. ராட்சச கணம்

இந்த ஒவ்வொரு கணத்திற்கும் ஒரு தனித்துவமான குணம் உள்ளது. அவற்றை இங்கு சுருக்கமாக பார்ப்போம்.

தேவ கணம் – உயர்ந்த சிந்தனைகள், லட்சியங்கள், சிறந்த எண்ணங்கள் உள்ளவர்களாக இருப்பார்கள். தேவகணத்தைச் சேர்ந்த 9 நட்சத்திரங்கள்: அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி.

மனித கணம் – மனித கணம் உள்ளவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக் கொள்ளும் குணம் உடையவர்கள். பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், பூராடம், பூரட்டாதி, உத்திரம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் மனித கணம்.

ராட்சச கணம் – ராட்சச கணம் உள்ளவர்கள் சொந்த சிந்தனைக்கு மட்டும் ஒத்துப்போகும் குணம் உள்ளவர்கள், வேறு யாருக்கும் அடங்காதவர்களாக இருப்பார்கள். கிருத்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் ஆகிய இந்த ஒன்பது நட்சத்திரங்களும் ராட்சச கணங்கள்.

சுருக்கமான விளக்கம்‌: குழந்தை பாக்கியத்தை கணிப்பது இந்த மகேந்திரப் பொருத்தம்.

திருமணம் முடிந்த கணவன் மனைவியின் குடும்பம் முழுமை பெற்று வம்சம் விருத்தியாவது குழந்தை பிறந்த‌ பின் தான். அப்படிப்பட்ட குழந்தை வரம் மணமக்களுக்கு இருக்கிறதா? ஆண் குழந்தை பிறக்குமா? என ஜோதிட ரீதியாக இந்த மகேந்திரப் பொருத்தத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அப்போது மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் அந்த மணமக்களுக்கு குழந்தை பாக்கியமே கிடைக்காதா? மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்ய கூடாதா? போன்ற கேள்விகள் பலருக்கும் இருக்கும். மகேந்திர பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் செய்து கொள்ளலாம் ஏனெனில் மிக முக்கியமானதாக மேலே குறிப்பிட்ட ஐந்து பொருத்தங்கள் இருந்தால் மட்டும் போதுமானது. தினப் பொருத்தமும், கணப் பொருத்தமும் சரியாக இருந்தாலே அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கண்டிப்பாக இருக்கும்.

மணப்பெண்ணின் நட்சத்திரத்தை முதலாக வைத்து, எண்ணும்போது மணமகனின் நட்சத்திரம், 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆவதாக வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.

சுருக்கமான விளக்கம்‌: மணமகள் நீண்ட ஆயுளுடன், மணமகனோடு பிரச்சினைகள் இல்லாமல் சந்தோஷமாக சேர்ந்து வாழ்வார்களா என்று கணிப்பது தான் இந்த பொருத்தம்.

திருமணம் ஆகும் போது ஆன்றோர் சான்றோர்கள் மணமகளை தீர்க்க சுமங்கலி பவா…! என்று ஆசீர்வாதம் வழங்குவர். அதன் அர்த்தம் என்ன தெரியுமா? மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம். (5 மாங்கல்யம் – திருமணத்தில் ஒன்று, 60, 70, 80, 96 வயதில் ஒவ்வொன்று)

இவ்வாறு மணப்பெண் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்களா என்பதை தெளிவாக சொல்லுவது தான் இந்த ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்.

பெண்ணின் நட்சத்திரத்தை முதலாவதாகக் கொண்டு எண்ணி வரும்போது மணக்க விரும்பும் ஆண்ணுடைய நட்சத்திரம் 13க்கும் மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கம் உண்டு. மேலும் 7க்கும் மேற்பட்டு இருந்தால் நடுத்தரமான ஸ்திரீ தீர்க்கம் உண்டு என்று சிலர் கூறுவர். இந்தப் பொருத்தம் இல்லை என்றால் ஸ்திரீக்கு (மணப்பெண்ணுக்கு) தீர்க்காயுள் (நீண்ட ஆயுள்) இருக்காது. கண்டம் உண்டாகும்.

சுருக்கமான விளக்கம்‌: கணவன் மனைவியின் தாம்பத்ய உறவையும் அன்யோனியத்தையும் கணிப்பது தான் இந்த பொருத்தம்.

திருமணப் பொருத்தங்களில் மகேந்திரப் பொருத்தம் இல்லை என்றாலும் இந்த யோனிப் பொருத்தம் பொருந்தினால் நிச்சயமாக அந்த தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

ஜாதகத்தில் இருக்கும் 27 நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித் தனியாக விலங்குகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

  • அசுபதி – ஆண் குதிரை
  • பரணி – ஆண் யானை
  • கார்த்திகை – பெண் ஆடு
  • ரோகிணி – ஆண் நாகம்
  • மிருகசீரிடம் – பெண் சாரை
  • திருவாதிரை – ஆண் நாய்
  • புனர்பூசம் – பெண் பூனை
  • பூசம் – ஆண் ஆடு
  • ஆயில்யம் – ஆண் பூனை
  • மகம் – ஆண் எலி
  • பூரம் – பெண் எலி
  • உத்திரம் – எருது
  • ஹஸ்தம் – பெண் எருமை
  • சித்திரை – ஆண் எலி
  • சுவாதி – ஆண் எருமை
  • விசாகம் – பெண் புலி
  • அனுசம் – பெண் மான்
  • கேட்டை – சுலை மான்
  • மூலம் – பெண் நாய்
  • பூராடம் – ஆண் குரங்கு
  • உத்திராடம் – பசு
  • திருவோணம் – பெண் குரங்கு
  • அவிட்டம் – பெண் சிங்கம்
  • சதயம் – பெண் குதிரை
  • பூரட்டாதி – ஆண் சிங்கம்
  • உத்ரட்டாதி – பசு
  • ரேவதி – பெண்யானை

கணவன் மனைவியின் நட்சத்திரங்கள் ஒரே யோனியாக இருந்தால் நல்லது. இதனால் அவர்களின் தாம்பத்திய உறவு சிறப்பாக இருக்கும் மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். இருவர்களின் நட்சத்திர யோனிகள் விரோதமுடையவைகளாக இருந்தால் பொருந்தாது, விரோதமில்லாமல் வெவ்வேறு யோனிகளைச் சேர்ந்திருந்தால் பொருந்தும்.

(1) பசுவும் புலியும்
(2) யானையும் சிங்கமும்
(3) குதிரையும் எருமையும்
(4) நாயும் மானும்
(5) கீரியும் பாம்பும்
(6) குரங்கும் ஆடும்
(7) பூனையும் எலியும் ஆக ஆண் பெண் அல்லது பெண் ஆண் நட்சத்திரங்களில் இருந்தால் அந்த மிருகங்களுக்குள் அதிக விரோதம் இருப்பதுப் போல தம்பதியினருக்கும் ஒற்றுமை இருக்காது. ஆகவே இதை ஆராய்ந்து அறிந்து திருமணம் செய்ய வேண்டும்.

சுருக்கமான விளக்கம்‌: திருமணத்திற்கு பின் கணவன் மனைவி நல்ல புரிதலுடன் நீண்ட காலம் மனக்கசப்பு இல்லாமல் வாழ்வார்களா என்று கணிப்பது தான் இந்த பொருத்தம்.

மணமக்களின் ராசிகளை மையமாக வைத்து பார்ப்பது இராசி பொருத்தம். முக்கியமாக பார்க்கப்படும் ஐந்து பொருத்தங்களுள் இதுவும் ஒன்று.

மணமகள் ராசிக்கு 2 ஆம் இடம் மணமகன் ராசியாக இருந்தால் ஆயுளுக்குத் தோஷம் உண்டாகும். ஆகவே திருமணம் செய்ய கூடாது. 6வது ராசியாக வந்தால் புத்திர நஷ்டம் மற்றும் புருஷன் அல்லது மனைவி நோய்வாய்ப்படுவார்கள். 9வது ராசியாக வந்தால் தீர்க்காயுளுடன் சௌமாங்கல்ய உண்டாகும். 10வது ராசியாக வந்தால் திரவிய லாபம். 11வது ராசியாக வந்தால் சந்தோஷமும் சுகமும் உண்டு.

சுருக்கமான விளக்கம்‌: திருமணத்திற்கு பின் கணவன் மனைவி நட்புடன் இருப்பார்களா? அல்லது சமமான மனநிலையுடன் இருப்பார்களா? அல்லது பகைமை உணர்வுடன் இருப்பார்களா? என்பதை கணிப்பது தான் இந்த பொருத்தம்.

இராசி அதிபதி பொருத்தத்தில் நட்பு, சமம், பகை என மொத்தம் மூன்று நிலைகள் உள்ளன. இதில் நட்பு அல்லது சமம் வந்தால் அந்த ராசி அதிபதிக்கு பொருத்தம் உள்ளது. பகை என்று மட்டும் வராக் கூடாது.

மணமகள் ராசி அதிபதியும் மணமகன் ராசி அதிபதியும் நட்பாகவோ சமமாகவோ இருந்தால் பொருத்தம் உண்டு. அதே பகையாக இருந்தால் பொருத்தம் இல்லை.

மேஷ ராசிக்கு அதிபதிஅங்காரகன் (செவ்வாய்)
ரிஷப ராசிக்கு அதிபதிசுக்கிரன்
மிதுன ராசிக்கு அதிபதிபுதன்
கடக ராசிக்கு அதிபதிசந்திரன்
சிம்ம ராசிக்கு அதிபதிசூரியன்
கன்னி ராசிக்கு அதிபதிபுதன்
துலா ராசிக்கு அதிபதிசுக்கிரன்
விருச்சிக ராசிக்கு அதிபதிஅங்காரகன் (செவ்வாய்)
தனுசு ராசிக்கு அதிபதிகுரு
மகர ராசிக்கு அதிபதிசனி
கும்ப ராசிக்கு அதிபதிசனி
மீன ராசிக்கு அதிபதிகுரு

இந்த ராசி அதிபதிப் பொருத்தம் பொருந்தியிருந்தால், அவர்களின் புத்திரர்கள் அதிர்ஷ்டசாலியாகவும், நீண்ட ஆயுளுடன், நல்ல புகழுடன் இருப்பார்கள்.

சுருக்கமான விளக்கம்‌: திருமணத்திற்கு பின் கணவன் மனைவி ‍இருவரும் நேசமாகவும் வசீகரத்துடனும் எப்போதும் பிரியமாகா இருப்பார்களா என்று கணிப்பது தான் இந்த பொருத்தம்.

மணமக்கள் திருமணத்திற்கு பின்பு நீண்ட காலம் அன்பாக அனுசரித்தும் புரிதலுடனும் வாழ முக்கியமானது வசியப் பொருத்தம். இருவரும் அன்பு மாறாமல் பிறர் மீது நாட்டம இல்லாமல் இருப்பார்கள். மணமகளின் ராசி மணமகனின் ராசிக்கு வசியப்பட்டால் இந்த வசியப் பொருத்தம் பொருந்தி உள்ளது.

இப்போது எந்த இராசிக்கு எந்த இராசி வசியம் என்பதை பார்ப்போம்.

மேஷ இராசிக்கு சிம்மம், விருச்சிகம் வசியம்.
ரிஷப இராசிக்கு கடகம், துலாம் வசியம்.
மிதுன இராசிக்கு கன்னி வசியம்.
கடக இராசிக்கு விருச்சிகம், தனுசு வசியம்.
சிம்ம இராசிக்கு மகரம் வசியம்.
கன்னி இராசிக்கு ரிஷபம், மீனம் வசியம்.
துலா இராசிக்கு மகரம் வசியம்.
விருச்சிக இராசிக்கு கடகம், கன்னி வசியம்.
தனுசு இராசிக்கு மீனம் வசியம்.
மகர இராசிக்கு கும்பம் வசியம்.
கும்ப இராசிக்கு மீனம் வசியம்.
மீன இராசிக்கு மகரம் வசியம்.

சுருக்கமான விளக்கம்‌: திருமணத்திற்கு பின் கணவனின் உயிர் மற்றும் உடல் குறித்த கணிப்புகள் நிறைந்த மிக முக்கியமான பொருத்தம் இது.

திருமணத்திற்கு பார்க்கப்படும் பத்து பொருத்தத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது இந்த ரஜ்ஜு பொருத்தம் தான். அவ்வளவு ஏன், பத்து பொருத்தத்தில் ஒன்பது பொருத்தங்கள் பொருந்தினால் கூட ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்ய கூடாது. அந்த அளவிற்கு இந்த ரஜ்ஜு பொருத்தம் முக்கியமானது.

ரஜ்ஜூப் பொருத்தத்தில் சிரசு ரஜ்ஜு, கண்ட ரஜ்ஜு, உதர ரஜ்ஜு, பாத ரஜ்ஜீ, ஊரு (தொடை) ரஜ்ஜு என ஐந்து வகையான ரஜ்ஜுகள் உள்ளன.

இந்த ரஜ்ஜூப் பொருத்தம் இல்லை என்றால் வரும் பாதிப்புகள் பற்றி தெளிவாக காண்போம்.

சிரசு ரஜ்ஜு – சிரசு என்றால் தலை என்று பொருள்.
பாதிப்பு: குடும்பத் தலைவரான கணவனுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

கண்ட ரஜ்ஜு – கண்ட என்பது கழுத்தைக் குறிக்கிறது.
பாதிப்பு: மாங்கல்யம் அணிய போகும் மணமகளின் கழுத்தைக் குறிப்பதால் மணப்பெண்ற்க்கு பெரும் பாதிப்பை கொடுக்கும்.

உதர ரஜ்ஜு – உதர என்பது வயிற்றைக் குறிக்கும்.
பாதிப்பு: தம்பதியினரின் குழந்தைகளின் காலம் விரைவாக முடிவடையும் அல்லது பெரும் பாதிப்பை கொடுக்கும்.

பாத ரஜ்ஜீ – பாதிப்பு: தம்பதியினர் நிச்சயம் பிரிந்து வாழ்வர்.

ஊரு (தொடை) ரஜ்ஜு – பாதிப்பு: எந்த செல்வமும் நிலைக்காது, வறுமை தாண்டவம் ஆடும், எல்லா செல்வங்களும் கண் முன்னே இழக்க நேரிடும்.

ரஜ்ஜூகிரகம்கிரகம்
சிரசுசெவ்வாய்செவ்வாய்
கண்டம்சந்திரன்இராகு
உதரம்சூரியன்குரு
தொடைசுக்கிரன்சனி
பாதம்கேதுபுதன்

மணமகனின் ரஜ்ஜூவும் மணப்பெண்ணின் ரஜ்ஜூவும் ஒரே ரஜ்ஜூவாக இல்லாமல் இருந்தால் இருவரும் நலமோடு வாழ்வார்கள்.

சுருக்கமான விளக்கம்‌: திருமணத்திற்கு பின் கணவன் மனைவி கவலைகள் இல்லாமல் எப்போதும் இன்பமாகவும் மனத் திருப்தியுடனும் இருப்பார்களா என்பதை கணிப்பது இந்த பொருத்தம்.

தம்பதியினருக்கும் வேதனைகள் இல்லாத வாழ்வைத் தரும் என்பதாலேயே வேதைப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. இந்த வேதைப் பொருத்தம் இருந்தால் மணமக்கள் சகலவிதமான தோஷங்களுடன் வேதனைகள் எதுவும் இல்லாமல் இருப்பார்கள்.

வேதை என்றால் ஒன்றுக்கொன்று தாக்குதலை ஏற்படுத்தும் என்று பொருள். இரு நட்சத்திரங்களுக்கு இடையே வேதை இருந்தால் அதற்கு பொருத்தமில்லை என்று பொருள்.

நட்சத்திரம்வேதை நட்சத்திரம்
அசுபதிகேட்டை
பரணிஅனுசம்
கார்த்திகைவிசாகம்
ரோகிணிசுவாதி
திருவாதிரைதிருவோணம்
புனர்பூசம்உத்திராடம்
பூசம்பூராடம்
ஆயில்யம்மூலம்
மகம்ரேவதி
பூரம்உத்ராட்டாதி
உத்திரம்பூரட்டாதி
ஹஸ்தம்சதயம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று வேதையாகும். மீதமுள்ள மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று வேதை நட்சத்திரம் ஆகும்.

சுருக்கமான விளக்கம்‌: கணவன் மனைவி இருவரும் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வார்களா என்பதை கணிப்பது தான் இந்த பொருத்தம்.

சில பகுதிகளில் மட்டுமே இந்த நாடிப் பொருத்தத்தைப் பார்க்கிறார்கள். நாம் முன்பு நட்சத்திரப் பொருத்தத்தில் குறிப்பிட்டதை போல இந்த நாடிப் பொருத்தத்துக்கும் அதுவே பொருந்தும். நாடிப் பொருத்தத்தில் நாடிகள் மூன்று வகைகள் உள்ளன.

  • வாத நாடி
  • பித்த நாடி
  • சிலேத்துமம் (நீர்ம) நாடி

வாத நாடி உள்ள நட்சத்திரங்கள்: அசுபதி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், ஹஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி

பித்த நாடி உள்ள நட்சத்திரங்கள்: பரணி, மிருகசீரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுசம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி

சிலேத்துமம் நாடி உள்ள நட்சத்திரங்கள்: கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

மணமகள் நட்சத்திரம் மற்றும் மணமகன் நட்சத்திரம் இரண்டும் வெவ்வேறு நாடிகளில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு. அதுவே இருவரின் நட்சத்திரங்களும் ஒரே நாடியில் இருந்தால் பொருத்தம் இல்லை.

சுருக்கமான விளக்கம்‌: திருமணத்திற்கு பின் தம்பதியினரின் வம்ச விருத்தி நிறைவு பெறுமா என்று கணிப்பது தான் இந்த பொருத்தம்.

விருட்சம் என்பது மரத்தை குறிக்கிறது. ஒரு வம்சம் என்பது ஆல மரத்தை போல வளருமா என்பதை கண்டறியும் பொருத்தமே இந்த விருட்ச பொருத்தம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மரமானது குறிப்பிடப்பட்டிருக்கிறது. மணமக்களின் நட்சத்திரத்தை வைத்து கணிக்கும் பொழுது கிடைக்கும் மரமானது பால் மரமாக இருந்தால் விருட்சப் பொருத்தம் பொருந்தி உள்ளது என்று அர்த்தம். இதனை மரப்பொருத்தம் என்றும் குறிப்பிடலாம்.